Monday, April 27, 2009

காற்றுக்கு ஒய்வு என்பதேது? அட எது?

தண்ணியில மீன் அழுதா
கரைக்கொரு தகவலும் வருவதில்லை
எனக்குள்ள நான் அழுதா
துடைக்கவே எனக்கொரு நாதியில்லை

மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

மழைக்காகதான் மேகம்
அட கலைக்காகதான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாமும்
மகனே வா
நீ சொந்தக் காலிலே நில்
தலை சுற்றும் பூமியை நீ வெல்லு
இது அப்பன் சொல்லியே சொல்லு
மகனே வா

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகளும் அழுவது ஏது ?
அட பறவையும் அழ அறியாயாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பதை கால் அறியாது
மகனே மகனே
காற்றுக்கு ஒய்வு என்பதேது அட எது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

No comments: